பாகிஸ்தானுடனான உறவில் புதிய அத்தியாயம் : சவூதியில் மன்மோகன் சிங்

பாகிஸ்தானுடனான உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.மூன்று நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ரியாத்திலுள்ள சவூதி ஆலோசனைக் கவுன்சிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

“பாகிஸ்தானுடனான உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியா ஒரு படி கூடுதலாகவே செயல்படத் தயாராக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நிரந்தர அமைதி ஏற்பட பாகிஸ்தானுடன் ஒத்துழைப்புடன் கூடிய உறவை இந்தியா கோருவதாகவும், இரு நாடுகளுக்குமிடையே ஒத்துழைப்பு நிலவினால் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் ஏற்பட்டு, அதனால் இந்தியா- பாகிஸ்தான் மற்றும் தெற்காசியாவில் அபிவிருத்தி நிலை அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது நடைமுறையில் சாத்தியமாக வேண்டுமானால், பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்மோகன் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply