ஜெர்மனியில் புலிகளின் அனைத்துலகசெயலப் பிரிவினர் கைது
ஜெர்மனியில் புலிகளின் அனைத்துலக செயலகப் பிரிவினர் நேற்று ஜெர்மனிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜெர்மன் தமிழர் பேரவை என்கிற புதிய பெயரில் இயங்கினாலும். புலிகளின் பழைய அனைத்துலக கட்டமைப்பில் இருந்தர்கள் என்று அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான். இவர்கள் மீண்டும் புலிகள் அமைப்பிற்கு பணம் தரும்படி மக்களிடம் பணம் சேகரித்து வந்தனர். அதற்கான பற்றுச் சீட்டில் யெர்மனிய பொறுப்பாளர் வாகீசனே கையெழுத்தும் போட்டுள்ளார்.
இந்த நிதி சேரிப்பு விடயம் மற்றும் பணம் கொடுக்காதவர்களை மிரட்டியது போன்ற செயல்களிற்காக இவர்கள் கைது செய்யப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கைது செய்யப் பட்டவர்களின் விபரங்கள்,வாகீசன்,சிவநாதன்,செந்தில்,சசி,மகிழன்,ராஜன் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும். மற்றும் இரும்பொறை றஞ்சன்.பரணி. சிவம் .ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply