தேர்தல் சட்டங்களை ஐ.ம.சு.மு வேட்பாளர் முழுமையாக கடைப்பிடிக்க ஜனாதிபதி பணிப்பு

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் எனவும் தேர்தல் சட்டங் களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரி பால சிரிசேன தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின் றனர். ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இதன்படி, வன்முறைகளற்ற நியா யமான தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணி வேட்பாளர்கள் பங்களிக்க உள்ளனர். தேர்தல் சட்டங்களை முழு மையாகக் கடை பிடிக்குமாறும் மக்க ளுக்கு சுதந்திரமாக வாக்களிப்பதற் குரிய சூழலை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி கேட்டுள்ளார்.

கடந்த 27ம் திகதி அனுராதபுர த்தில் கூடிய ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் நீதியானதும் அமைதி யானதுமான தேர்தலுக்கு ஒத்துழை ப்பு வழங்குவதாக ஜனாதிபதி முன் னிலையில் அனைவரும் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்த லின் பின்னர் இடமாற்றங்களும் அரசியல் வழிவாங்கல்களும் இடம் பெறுவதாக கூறப்படும் குற்றச்சாட் டில் உண்மை கிடையாது. அரசியல் காரணங்களுக்காக அரசியல் தலை வர்களை இடமாற்றவோ அரச ஊழி யர்களை பழிவாங்கவோ கூடாது என ஜனாதிபதி கடுமையாக உத்த ரவிட்டுள்ளார். ஐ. தே. க. அரசுகள் ஆட்சிக்கு வரும் போதே நாட்டில் அரசியல் வழிவாங்கல் அதிகமாக இடம்பெறும்.

ஆனால், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது அரசியல் பழிவாங்கல்கள் இடம் பெறாது. 2005 தேர்தலின் பின்னரோ 2010 தேர்தலின் பின்னரோ அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறவி ல்லை. அவ்வாறு வழிவாங்கல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply