பேராதனையில் நிருபமாராவால் இந்திய மத்திய நிலையம் திறந்து வைப்பு
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீமதி நிருபமாராவ் பேராதனையில் ஆங்கில மொழிப் பயிற்சிக்கான இலங்கை – இந்திய மத்திய நிலையத்தை இன்று மு.ப.10.00 மணியளவில் திறந்துவைத்தார். இந்திய உதவியுடன் அபிவிருத்திவெய்யப்பட்ட இந்நிறுவனம் முன்னர் ஆங்கில ஆசிரியர் உயர் கல்விக்கான கல்வியியற் கல்லூரியாக இருந்தது. இந்திய-இலங்கை நட்புறவானது மிகப் பழைமையானதும் மிக உறுதியானதுமென்று அவர் அங்கு கருத்துத் தெரிவித்தார்.
வாழ்க்கைத்திறனுக்கான வாழ்வாதாரத்தை ஆங்கிலக் கல்வி தருவதாகவும் பூகோளமயமாக்களில் இது ஒரு தொடர்பாடல் பொது மொழியாகவும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply