மகளிர் கெளரவமாக வாழும் சூழலை அமைத்துள்ளோம்: ஜனாதிபதி
எமது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக இருந்த புலிகள் பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டதையடுத்து சுதந்திர இலங்கையில் நடைபெறும் முதலாவது மகளிர் தின தேசிய நிகழ்வுக்கு வாழ்த்துக் கூற சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ள தாவது:-மகளிரின் அபிமானம், கெளரவம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பயங்கரவாதம் பெரும் தடையாக இருந்தது. பயங்கரவாத பிடியில் சிக்கி பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த அனைத்து மகளிரையும் அதில் இருந்து மீட்டு அபிமான மிக்க மகளிர் பரம்பரையாக இலங்கை மகளிர் வாழ்வதற்கு தேவையான சூழலை நாம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
சமூக கட்டிடத்தின் அத்திவாரமான குடும்பம் எனும் அலகில் முதல் இடத்தை பெறுவது தாய் தான். தாய், தந்தை, பிள்ளைகள் என குடும்பம் நன்றாக வாழ்க்கை நடத்தும்போது அக் குடும்பத்தில் அன்பு, பாசம், கருணையுடன் சமாதானமும் ஏற்படும். அமைதியான குடும்பம் நாட்டின் அபிவிருத்திக்கு நல்லதோர் உந்து சக்தியாகும் என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply