2015ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வறுமை நிலை முற்றாக ஒழிக்கப்படும்: அமைச்சர் ராஜித

2015 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் இருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்படும். தற்பொழுது இரண்டாவது உலக நாடாக வளர்ந்து வரும் இலங்கை மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்வரும் 6 வருட ஆட்சிக் காலத்தில் முதலாம் உலக நாடாக வளர்ச்சியடையும். தலைசிறந்த நாட்டுத் தலைவரும் பலமான அரசாங்கமும் உள்ள நாடுகளே துரிதமாக அபிவிருத்தி கண்டுள்ளன. எமக்கு தலைசிறந்த தலைவர் கிடைத்துள்ளதோடு பலமான அரசாங்க மொன்றை அமைக்கவே மக்கள் ஆணையை கோருவதாக நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்தி ருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (08) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அங்கு கருத்தத் தெரிவித்த அமைச்சர்.

ஐ. ம. சு. முன்னணிக்கு 2/3 பெரும்பான்மை பலம் கிடைப்பதை தடுப்பதே எதிர்க் கட்சிகளின் பிரதான தேர்தல் கோசமாக உள்ளது. யுத்தத்திற்கு முடிவு கட்டிய எமது அரசாங்கம் வறுமையை ஒழிக்கும் இரண்டாவது யுத்தத்தை ஆரம்பித்துள்ளது. 1995 களில் 29 வீதமாக இருந்த வறுமை வீதம் 2009 இல் 15 ஆக குறைந்துள்ளது- 2015 – 16 ஆண்டாகும் போது வறுமையை முற்றாக ஒழிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மக்கள் ஆணை தேவை.

சர்வதேச நாணய நிதியம் வறிய நாடு என்ற பட்டியலில் இருந்து இலங்கையின் பெயரை அகற்றியுள்ளது. தெற்காசிய நாடுகளிடையே வறிய நாடு என்ற பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ள முதலாவது நாடு இலங்கையாகும்.

மூன்றாம் உலக நாடாக உள்ள இல ங்கை இரண்டாம் உலக நாடாக வளர்ந்து வருகிறது. எதிர்வரும் 6 வருட காலத்தில் முதலாம் உலக நாடாக இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் காலத்தில் இளைஞர்கள் தொழில் தேடி விண்ணப்பங்களு டன் அலையும் நிலை ஏற்படாது. உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றவாறு எமது கல்வி முறை மாற்றப்படும்.

2012 ஆம் ஆண்டாகும் போது அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படும். தற்பொழுது 87 வீதமானவர்களுக்கே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சகலருக்கும் குடிநீர் வசதி அளிக்கும் வகையில் பாரிய குடி நீர்த்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply