ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசதகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீ. 15 அமைப்பில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் நடைபெறும்போது அதன் புதிய தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, பிரேஸில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமெய்கா, கென்யா, மலேசியா, மெக்ஸிகோ, நைஜீரியா,செனகல், ஸ்ரீலங்கா, வெனிசுலா,மற்றும் ஸிம்பாப்வே ஆகிய 17 நாடுகள் இந்த ஜீ 15 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன.
இதன் தற்போதைய தலைமைத்துவத்தை ஈரான் வகிக்கின்றது. அடுத்த தலைமைத்துவத்துக்கு மிகப்பொருத்தமானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என அந்நாடுகள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply