இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி சூழ்நிலை காரணமாக இங்குவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரவேற்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அதிகார சபை தெரிவித்திருப்பதாக அரச இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இவ்வருடத்தின் பெப்ரவாரி மாதத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 67.7 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி 57,300 பயணிகள் இலங்கை வந்துள்ளதாக அதிகார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த எண்ணிக்கையைக் கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரியுடன் ஒப்பிடும் போது, அந்த மாதத்தில் 34,169 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்துள்ளனர். மேற்கு ஐரோப்பா, தெற்காசியா, கிழக்காசியா, மத்தியகிழக்கு மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தே அநேகர் இலங்கைக்குக் கடந்த மாதம் வந்துள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து கடந்த வருடம் மே மாதம் முதல் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. 2010 இல் போய் பார்க்க வேண்டிய 31 இடங்களில் இலங்கை முதலிடம் வகிப்பதாக அண்மையில் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை தரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்துக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply