கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கபட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை: தெணியான்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரளுமன்றதேர்தலில் சுயோட்சை குழுவாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினர்கள் பாரளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யபட்டால் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளை சிறுபான்மைத் தமிழரின் பிரச்சனைகளையும் முன்வைக்கபடும் என தோழர் தெணியான் ரிபிசியில் நடைபெற்ற வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கபட்ட மக்களின் நலண்களை பாதுகாக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதேவேளை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரிகட்சிகள் சிறுபான்மை தமிழர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் எனவும் அந்த நிலமை தற்போதைக்கு இல்லை எனவும் இதனால் தான் ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளையும் அவர்களின் நலண்களையும் பாதுகாக்கும் பொருட்ட ஒரு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுகொள்ளுவதற்க்காகவே இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரளுமன்றதேர்தலில் சுயோட்சை குழுவாக போட்டியிடுகிறது என தோழர் தெணியான் ரிபிசியில் நடைபெற்ற வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்
கடந்த தேர்தலில் போது புலிகளின் பலத்துடன் பின்கதவால் பாரளுமன்றம் சென்றவர்கள் இன்று நான்கு அணிகளாக பிளவுபட்டு இத்தேர்தலில் போட்டியிடும் போது சிறுபான்பை தமிழர்கள் சுயோட்சை குழுவாக போட்டியிடுவதன் மூலம் தமிழ்மக்களின் வாக்குகள் பிரிக்கபட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் சிதைக்கபடுகிறது என குற்றசாற்றை நிராகரித்தார்
ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளை அஙகரிக்காமால் தமிழ்மக்களின் ஒற்றுமைபற்றி பேசுவது தாங்களின் பாரளுமன்ற கதிரைகளை பாதுகாத்து கொள்ளுவதற்காகவேதான் என தெரிவித்த தோழர் தெணியான் இவர்களிடைய ஒரு ஒற்றுமை ஏற்படுத்த முடியாமால் தமிழர்கள் தமிழ் தேசியத்திற்க்காக வாக்களிக்க வேண்டும் என கேட்பது தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ஓரு நடவடிக்கை எனவும் தெரிவித்தார்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு முற்போக்கு அரசியல்வாதி எம்மை அணுகி பாரளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என பேசினார் ஆனால் தோர்தல் அறிவிக்கபட்ட பிறகு எமக்கு எம்முடன் எந்தவிதமான தொடர்பை அவர் மேற்கொள்ளவில்லை அதன் பிறகு தான் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக பத்திரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதன் பிறகு கூட இடதுசாரி செயற்பாட்டாளர்களே அல்லது முற்போக்கு சிந்தனையாளர்களே எங்களை அனுகவில்லை அதனுடைய தாக்கம் தான் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை பாரளுமன்ற தேர்தலில் சுயோட்சையாக போட்டியிடுவது என முடிவினை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்
இக் கலந்துரையாடலில் நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் பேச்சாளாரும் இலக்கியவாதியுமான தெணியானுடன் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர்களுடன் பல நேயர்களும் கலந்து கொண்டு உரையாடினார்.
வடமராட்சியிலுள்ள பொலிகண்டியை பிறப்பிடமாகக் கொண்ட கந்தையா நடேசு என்பவரே இன்று ‘தெணியான்‘ எனும் புனைபெயரில் நிலைத்திருக்கும் படைப்பிலக்கியவாதி.
தோழர் தெணியான் அவர்கள் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினாராக செயல்பட்டுவந்தவர்.
சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக பல்வேறுபட்ட போராட்டங்களிலும் பங்குகொண்டவர். அதுமட்டுமல்லாது படைப்பிலக்கியத்தினூடாக சாதியக் கொடுமைகளை அம்பலப்படுத்தியும் வந்தவர். தற்போதும் அப்பணியைத் தொடர்ந்தும் மேற்கொண்டுவருபவர். புலிகளின் இராட்சியத்தில் அமைப்பு ரீதியான சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் தடைசெய்யப்ப்டபோதிலும் தோழர் தெணியான் அவர்கள் சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை தனது படைப்பிலக்கியத்தினூடாக வெளிப்படுத்தி வந்தவர்.
இவர் ‘விடிவைநோக்கி‘ ‘கழுகுகள்‘ ‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்‘ ‘மரக்கொக்கு‘ ‘காத்திருப்பு‘ போன்ற நாவல்களை எழுதியவர். அத்தோடு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பல்வேறு கட்டுரைகளையும் எழுதியவர்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் சுயேட்சையாக போட்டியிடுகின்றது. அச்சுயேட்சைக் குழுவின் பிரச்சாரப் பிரிவும் தோழர் தெணியான் தலைமையிலே செயல்பட்டுவருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply