அபிவிருத்திகள் ஆரம்பிக்கும் நாள் ஏப்ரல் 9 : அமைச்சர் டக்ளஸ்

ஏப்ரல் 9ம் திகதியை எமது பகுதிகளுக்கான அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கும் நாள் எனக் கொள்ளும்படியும், எமது மக்கள் ஈ. பி. டி. பி.யினராகிய எமக்கு அதிக அரசியல் பலத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.புங்குடுதீவு மற்றும் வேலணைப் பகுதிகளில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் அலுவலகங்களில் வைத்து பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

எமது மக்களுடன் நாளாந்தம் தங்கியிருந்து எமது மக்களுக்காக சேவை செய்பவர்களையே எமது மக்கள் தங்கது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தேர்தல் காலங்களில் மட் டும் எமது மக்களிடம் வந்து வாக்குகளை அபகரித்துக் கொண்டு அதன் பின்னர் எமது மக்களைத் திரும்பியும் பாராதவர்களை எமது மக்கள் கடந்த காலங்களில் இனங்கண்டு கொண்டிருப்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.எமது மக்கள் பல்வேறு அழிவுகளை எல்லாம் சந்தித்திருந்த போது இப்பக்கம் தலை வைத்தும் படுத்திராத பலர் இப்போது தேர்தல் என்று வந்தவுடன் படையெடுத்து வந்து எமது மக்களை மீண்டும் படுகுழிக்குள் தள்ளவே முற்படுகின்றார்கள் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக் காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply