கடந்த மே மாதம் நடைபெற்ற தாக்குதலின் போது பெட்டு அம்மான் கொல்லப்பட்டார்
தேடப்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் பெயர் நீக்கப்பட வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச காவல்துறைப் பிரிவான இன்டர்போலின் தேடப்பட்டு வருவோரின் பட்டியலில் பொட்டு அம்மானின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தாக்குதலின் போது பெட்டு அம்மான் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த நிலைமையில் பொட்டு அம்மானின் பெயர் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளின் பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைவர் கபில ஹெந்தவித்தாரன தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply