மொத்த ஆசிரியரில் கால்வாசி பகுதியினர் கடந்த நான்கு வருடங்களிலேயே நியமனம்: அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த்
தற்பொழுது ஒரு இலட்சத்து 87 ஆயிரம் ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றனர். இதில் 35,700 ஆசிரியர்கள் கடந்த 4 வருட காலத்திலேயே நியமிக்கப்பட்டனர். கடந்த 4 வருட காலத்திலே தடைப்பட்டிருந்த அதிபர் சேவை பதவி உயர்வுகள் மீண்டும் வழங்கப்பட்டதோடு புதிதாக அதிபர்களும் நியமிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்:- 2005 நவம்பர் மாதத்தின் பின்னர் 35,700 ஆசிரியர்கள் புதிதாக நியமிக் கப்பட்டனர். இதில் பட்டதாரி ஆசிரியர்கள் 21,000 பேர், கல்வி யியல் கல்லூரிகளினூடாக 9 ஆயிரம் பேர் நியமி க்கப்பட்டதோடு தோட்டப் பாட சாலைகளுக்கு 3715 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. தொண் டர் ஆசிரியர்கள் 4700 பேரை ஆசி ரிய உதவியாளர்களாக நியமித்தோம்.
தற்பொழுதுள்ள மொத்த ஆசிரியர் தொகையில் 1/4 பகுதியினர் கடந்த 4 வருட காலத்திலேயே நியமிக்கப் பட்டனர்.கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங் களில் ஓரளவு ஆசிரியர் பற்றாக் குறை காணப்படுகிறது. தேர்தலின் பின்னர் தேவைக்கேற்ப ஆசிரியர் இடமாற்றங்கள் செய்யப்படும்.பல வருடங்கள் இடை நிறுத்த ப்பட்டிருந்த அதிபர் சேவை பதவி உயர்வு மீண்டும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு தகவல் தொழில் நுட்ப அறிவு வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 85 ஆயிரம் ஆசிரி யர்களுக்கு இது தொடர்பான பயி ற்சி வழங்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 16 ஆயிரம் பேருக்கே பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டது.
இதனை 20 ஆயிரமாக எமது அரசு அதிகரித்தது. க. பொ. த. உயர்தர பெறுபேறும் அதிகரித்துள்ளது. இது தவிர ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு மடிக் கணனி வழங்கும் திட்டமொன் றையும் ஆரம்பித்துள்ளோம். சீருடைகள், பாடப்புத்தகங்கள் என்பன உரிய நேரத்திற்கு வழங்கப்படுகிறது என்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு வருவது குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,பல அத்தியாவசியப் பொருட்களின் வரிகள் நீக்கப்பட்டுள்ளது. சீனிக்கு ஒரு வீதம் மட்டுமே வரி அறவிடப்படுகிறது. சமையல் எரிவாயுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அரிசி விலை உயர்வாக இருந்தது.ஆனால் நெல் அறுவடை ஆரம்ப மாகியுள்ளதால் அரிசி விலை குறை ந்து வருகிறது என்றார் அவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply