தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் மன்னாரில் விநியோகம்!

மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக கூட்டமைப்பின் வேட்பாளர்களைச் சாடி துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் வன்னி மாவட்டம் என்று முகவரியிட்டு இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரசுரத்தில் உள்ள சாராம்சம்:-

 

1.   புலிகளை அழிக்கும் வரை மௌனம் காத்திருந்தமை

2.   எம்.பிக்களின் குடும்பம், சொத்துக்கள், நிலபுலன்கள், வியாபார நிலையங்கள், என்பனவற்றிற்கு இந்தியாவின் பூரண பாதுகாப்பு.

3.   நாட்டைவிட்டு ஓடியவர்களும், புலம் பெயர்ந்தவர்களும், தேர்தலில் போட்டியிட மீண்டும் மக்கள் முன் வருகை.

4.   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க மறுத்தமை.

5.   யுத்த பேரழிவில் சிக்கிய, உயிரிழந்த, உடல் ஊனமுற்ற, பல்லாயிரக்கணக்கானோரையும், அவர்களது குடும்பத்தினரையும், இது வரையில் சென்று பார்க்காமையும், ஆறுதல் கூறாமையும்.

6.   புலிகளை உருவாக்கிய தமிழரசுக்கட்சியும், இந்தியாவும், புலிகளை அழிக்க முன் நின்ற இந்திய அரசின் சொற் கேட்டு தமிழ் சமூகத்தைக் காட்டிக் கொடுத்தல்.

7.   பாராளுமன்றத்தில் ஆறு வருட சேவையை முடித்துக் கடைசியில் கொழுத்த ஓய்வூதியம் பெற்றும், மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் ஆசை.

8.   மொத்தத்தில் இந்தியாவின் சொற் கேட்டு, அதன் கைக் கூலிகளாக மாறியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்துள்ள, 2010 தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்துடன் கூட்டணி அமைக்கவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும், அவர்களது விசுவாசிகளையும், இனம் கண்டு இத் தேர்தலில் தோற்கடிக்கும்படி மேற்படி துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எமது மன்னார் நிருபர்

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply