மன்னார் சிறைச்சாலை சிறைக்கூடத்திற்கு கஞ்ஞா போதைப் பொருளுடன் சென்றவர் கைது
கஞ்ஞா போதைப் பொருளை சிறைச்சாலை சிறைக்கூடத்திற்குள் எடுத்துச்சென்றார் எனும் குற்றச்சாட்டின் பெயரில் மன்னாரில் கைது செய்யப்பட்ட இளைஞனை தடுப்புக்காவலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார். மன்னார் சிறைச்சாலை சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர் ஒருவரை சந்திப்பதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தபட்ட போதே குறித்த இளைஞரிடமிருந்து கஞ்ஞா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.
சம்பவதினமான நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் மன்னார் உப்புக்குளம் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை சிறைக்கூடத்திற்ல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர் ஒருவரை சந்திக்க சென்ற 23 வயதுடைய இளைஞர் சந்திப்பதற்கான அனுமதியினை சிறைச்சாலை அதிகாரியிடம் கோரியிருக்கின்றார். இதனையடுத்து சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி என்.யி. சிறிசேன குறித்த நபரை உடற்சோதனைக்கு உட்படுத்திய போது இளைஞரின் கால்சப்பாத்தின் உள் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்ஞா பொதி கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து உசாரடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மன்னார் பொலிஸார் ஊடாக குறித்த நபரை கைது செய்து மன்னார் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்திருக்கின்றனர்.விசாரனைகளை மேற்கொன்ட மன்னார் மாவட்ட நீதவான் அ.யூட்சன் குறித்த இளைஞனை எதிர் வரும் 5ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றார். இதேவேளை மன்னார் சிறைச்சாலை அதிகாரிகளின் கடமை உணர்வையும் பொறுப்பையும் நீதவான் சிறப்பாக பாராட்டியிருக்கின்றார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply