ஆலோசனைக் குழு உருவாகிறது: ஐ.நா.
இலங்கை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவில் இடம்பெறக்கூடிய நபர்களை அடையாளம் காணும் பணியில் தாம் ஈடுபட்டிருப்பதாக ஐ.நா.மன்றத்தின் தலைமைச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். இலங்கை போரின் இறுதி நாட்களின்போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், இலங்கை தொடர்பான மற்ற விடயங்கள் குறித்தும் இந்த நிபுணர் குழு ஆலோசனை வழங்குவார்கள்.
“ஐ.நா. மன்றத்திற்கான இலங்கை தூதரை ஐ.நா. அதிகாரிகள் குழுவின் தலைமை அதிகாரி சந்தித்து பேசிவருகிறார். அவர்கள் இருவரும் இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காண்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஐ.நா. மனறத்தின் அதிகாரி லின் பாஸ்கோ விரைவில் இலங்கைக்கு சென்று அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார் பான் கி மூன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply