நளினியின் விடுதலை கோரிக்கை நிராகரிப்பு
முன்னள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிக்க சிறை ஆலோசனைக் குழு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்தப் பரிந்துரையை ஏற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நளினி தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தை இடம்பெற்றது. இதன் போது சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல் வெளியிடப்பட்டன. நளினியை விடுவிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்ட விடயங்களை தமிழக அரசு ஏற்றுள்ளது. இதன்மூலம் நளினி முன் கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. முன்னதாக சிறை ஆலோசனைக் குழு தனது அறிக்கையில், நளினியின் நன்னடத்தையைக் காரணம் காட்டி அவரை முன்கூட்டியே விடுவிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக அவரை விடுவிக்க முடியாது என தற்போது அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply