இடம்பெயர்ந்தோருக்கென 37 வாக்களிப்பு நிலையங்கள்

வடமாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்ட நலன்புரி மற்றும் மீள்குடியேற்ற கிராமங்கள் மற்றும் தனியார் வீடுகளில் தங்கியிருப்போர் வாக்களிக்கவென 37 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன என புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் யாழ்., வன்னி மாவட்டங்களைச் சேர்ந்த 26,582 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 4,547 பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 22,035 பேர் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். யாழ். மாவட்ட இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க 22 நிலையங்களும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு 37 வாக்களிப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. யாழ். வன்னி மாவட்ட மக்கள் ஒரே கிராம அதிகாரி பிரிவில் வசிப்பதால் ஒரு பிரிவில் இரு வாக்களிப்பும் இடம்பெற ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக 3 வாக்கெண்ணும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒன்று யாழ்ப்பாணத்திலும் 2 வன்னியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply