சென்னையில் நேற்றிரவு நில நடுக்கம் : மக்கள் பீதி

சென்னையில் நேற்‌றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடியதா‌ல் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை‌யி‌ல் நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொட்டிவாக்கம், ராயப் பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் நேற்றிரவு 10.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். இதனால் தூங்கிக் கொண்டிருந்த பலர் வீட்டைவிட்டு அவசரமாக வெளியே ஓடினர். நிலநடுக்கத்திற்குப் பயந்து சாலை‌யி‌ல் வந்து அமர்ந்து கொண்டனர். வீட்டிலிருந்த பாத்திரங்கள் அதிர்ந்ததை உணர்ந்ததாக நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அந்த அதிர்ச்சியில் மீள்வதற்கு சற்று நேரம் பிடித்ததாக கூறினர். கட்டிலில் படுத்து தூங்கியவர்களுக்கு தூக்கத்திலே தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் எழுந்து உட்கார்ந்தபோது நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தலைச்சுற்றல் மாறுவதற்குச் சில நிமிடங்களானதாகவும் புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிலர் கூறினர். சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர், சென்னையில் பூமி அதிர்ந்ததை உறுதி செய்தார்.

அவர் கூறுகையில்,

“அந்தமான் தீவில் நேற்றிரவு 10.30 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் சென்னையில் உணரப்பட்டது. எங்கள் அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டத்தை உணர்ந்தோம். நிலநடுக்கம் 3 முதல் 4 வினாடிகள் வரை நீடித்தது.

இதுபோன்று, சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், கொட்டிவாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் உட்பட பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தொலைபேசியில் தெரிவித்தனர். இந்த லேசான நிலஅதிர்வால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார். ஒரிசாவில் கட்டாக், புவனே‌ஸ்வரம் போன்ற நகரங்களிலும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply