இரு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை

இரு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு குவைத்தில் வேலை செய்த போது தமது எஜமானரை கொலை செய்த பின்னர் அங்கிருத்து தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து தாக்கல் செய்த வழக்கில் இவர்கள் குற்றவாளியாக காணப்பட்டு வழக்கில் ஆஜராகாமலே இவர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஹஜ் மொய்தீன் என்ற ஆண் சந்தேக நபர் சாரதியாகவும், சிஸா சிஃபா என்ற பெண் பணிப்பெண்ணாகவும் குறிப்பிட்ட வீட்டில் பணிபுரிந்துள்ளனர். 2006 டிசம்பர் 8ம் திகதி தமது எஜமான் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி இவர்கள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply