நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் : யாழில் ஜனாதிபதி

நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் பயம், பிரிவினைகள் அற்ற சுதந்திரமான சூழலை உருவாக்கவே தான் பாடு பட்டதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நான் உங்களை சந்திக்க வந்தேன். எனக்கு வாக்களித்தமைக்காக நான் நன்றி கூறுகின்றேன். தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை விட வாக்களிக்கும் சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்தோம் என்பது இங்கு முக்கியமானதாகும்.

விடுதலைப் புலிகளின் வழியில் செல்வதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களை இனங்கண்டுகொள்ள வேண்டும். நாட்டு மக்கள் எல்லோரையும் நான் ஒரே கண்ணோட்த்திலேயே பார்க்கிறேன்” என அவர் அங்கு மேலும் தெரிவித்தார். கூட்டத்துக்கு முதல் ஜனாதிபதி நல்லூர் ஆலயத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply