முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிப்பு
தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் உள்ளிட்டோரை இலங்கை ஜனாதிபதி விடுவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அடுத்து இதுவரைகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த, காயமடைந்து ஊனமுற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1175 பேர், சிறார் போராளிகள் 175 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 178 பேர் என மொத்தத்தில் 1528 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் வைபவரீதியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பம்பைமடு முகாமில் இவர்களை விடுவிக்கும் வைபவம் நடந்துள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் 3ஆம் தேதி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply