தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவு ஊர்வலங்கள், பேரணிகளுக்கு 7 தினங்களுக்கு தடை

2010 பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் நாளை 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன. இன்று 4ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் பிரசாரங்களுக்கென பயன் படுத்தப்பட்டுவரும் பெனர்கள், கட்அவுட்டுகள், போஸ்டர்கள், கொடிகளை அகற்றும் நடவடிக் கைகளை கடுமையாகச் செயற்படு த்துமாறு பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் முடிவடை ந்து ஏழு நாட்களுக்கு ஊர்வலங் கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங் கள் நடத்துவதும் தடைசெய்யப் பட்டுள்ளதாக தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.நாளை நள்ளிரவு முதல் பாது காப்பு மற்றும் தீவிர கண்காணி ப்புப் பணிகளுக்கென நியமிக்கப் பட்டுள்ள 2584 நடமாடும் பாது காப்பு பிரிவுகளும் செயற்பட ஆர ம்பிக்கவுள்ளன.

இதேவேளை தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும் இதுவரை வாக்களிக்காதவர்கள் இருப்பின் தவறாது உடனடியாக வாக்களிக்குமாறும், எதிர்வரும் எட்டாம் திகதி மாலை 4.00 மணி க்கு வாக்குச் சீட்டுகள் யாவும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.19,500 முப்படையினரும், 58,700 பொலிஸ் மற்றும் விசேட அதிர டிப் படையினரும் இன்று முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத் தப்படவுள்ளனர்.

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் வேட்பாளர்கள் அனைவரும் தமது பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தைத் தவிர்ந்த ஏனைய அலுவலகங்களை மூடிவிட வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள், வாக்கெண் ணும் நிலையங்கள், வாக்குப்பெட் டிகள் எடுத்துச் செல்லும் வாக னங்கள் என்பவற்றுக்கும் பாதுகா ப்பு வழங்கப்படுகிறது. வாக்கா ளர் அட்டைகள் இதுவரை கிடை க்காதவர்கள் தபாலகங்களில் வாக் காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தேர் தல் திணைக்களம் அறிவிக்கிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட பொதுத் தேர்த லுக்கு பாதுகாப்பு நடவடிக்கை கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டிலுள்ள 413 பொலிஸ் பிரி வுகளும் உஷார் நிலையில் வைக் கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தாம் வாக்க ளிக்கும் வாக்குச்சாவடியைத் தவிர வேறு வாக்குச் சாவடிக்கு செல் வதாயின் வேட்பாளருக்குரிய ஆள டையாள அட்டையுடன் மட்டுமே செல்லமுடியும் என்றும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply