தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியின் அழைப்பு
ஐக்கியப்பட்டு இலங்கையைக் கட்டியெழுப்புவதில் பங்காளிகளாக முன்வருமாறு தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கின்றார். தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் கூறுகின்றார். இது ஒருபுறம். மறுபுறத்தில் சர்வதேசத்தின் ஆதரவைப் பெறத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று சம்பந்தன் அழைப்பு விடுக்கின்றார்.
இவ்விரு அழைப்புகளுள் எந்த அழைப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்பதையிட்டுத் தமிழ் மக்கள் சரி யான முடிவுக்கு வர வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் புதியதேயொழிய அதன் அரசியல் பாதை புதியதல்ல. ஐம்பதுகளில் தொடங்கி இன்றுவரை ஒரே அரசியல் பாதையில் பயணித்தவர்களால் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற ஒரேயொரு கோரிக்கையின் அடிப்படையிலேயே இவர்களின் சகல செயற்பாடுகளும் அமைந்துள்ளன. எனினும் இனப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. தீர்வை அணுகிச் செல்லவுமில்லை. முழுமையான தீர்வுக்கு அண்மித்ததான தீர்வுத் திட்டம் கடந்த காலத்தில் முன்வைக்கப்படாமலுமில்லை. அச் சந்தர்ப் பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சரியா கப் பயன்படுத்தாததால் தீர்வு முயற்சி இப்போது வெகுவாகப் பின்தள்ளப்பட்டுவிட்டது.
தங்கள் ஐந்து தசாப்த காலப் பலவீனத்தை மறைப்பதற்காகக் கூட்டமைப்புத் தலைவர்கள் இப்போது சர்வதேசம் பற்றிப் பேசுகின்றார்கள். இவர்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்கவில்லை. சர்வதேசத்தின் ஆதரவைப் பெறுவதற்காக வாக்களிக்குமாறு கேட்கின்றார்கள். இலங்கையின் இனப் பிரச் சினைக்குச் சர்வதேசம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்பிக் கொண்டு இருப்பதைப் போன்ற முட்டாள்தனம் வேறொன் றும் இருக்க முடியாது.
கடந்த பத்துவருடங்களுக்கு மேலாகக் கூட்டமைப்புத் தலைவர்கள் சர்வதேசத்தின் உதவியைக் கோரி வருகின்றார்கள். எல்லா நாடுகளினதும் இலங்கைத் தூதரகங்களுக்குச் சென்று விளக்கம் அளித்திருக்கின்றார்கள். எதுவுமே நடக்கவில்லை. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதில் சர்வதே சம் வகிக்கக் கூடிய பங்கு மிகக் குறைவானது. தமிழ்த் தலை வர்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்கின்ற நிலையிலேயே சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்க்கலாம்.
கூட்டமைப்புத் தலைவர்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான ஆலோசனைகளைத் தயா ரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவி லிருந்து முற்றாக ஒதுங்கியிருந்தார்கள். இவ்வாறு தீர்வு முயற் சியிலிருந்து ஒதுங்கி இருந்துகொண்டு சர்வதேச ஆதரவு பற் றிப் பேசுவதில் அர்த்தமில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனப் பிரச்சினையை யதார்த்த பூர்வமாக அணுகுகின்றார். சமகால யதார்த்தத்துக்கு அமை வான தீர்வையே இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு நியாயமானது. உடனடியாகச் சாத் தியமான தீர்வை ஏற்றுக்கொண்டு கூடுதலான அதிகாரங்களு க்காகத் தொடர்ந்து முயற்சிப்பது என்ற கோட்பாட்டுக்கு உடன் பாடானதாக இந்த நிலைப்பாடு உள்ளது. இன்றைய நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பே நியாயமா னது. காலத்துக்கு அமைவானதும் கூட.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply