வெளிநாட்டு கண்காணிப்பாளர் பணி ஆரம்பம்; 19பேர் களத்தில்

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இலங்கை வந்திருக்கும் 19 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திரு ப்பதாக சுதந்திர தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெப்ரல் அமைப்பின் சார்பாக தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, இந்தியா, மியன்மார், இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளிலிருந்து 16 பேர் இலங்கை வந்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர்கள் இருவர் வீதம் எட்டுக் குழுக்களாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண் காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சி. எம். ஈ. வி. அமைப்பு இங்கிலாந்து, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து மூன்று வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக வரவழைத்திருப்பதாக அதன் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, சுமார் 15 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கென 565 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள் ளன. இதன்படி, பெப்ரல் அமைப்பு 11,000 க்கும் மேற்பட்டோரை உள்ளூர்க் கண்காணிப்பாளராகப் பயன் படுத்தவுள்ளது. அதேநேரம், சீ. எம். ஈ. வி. சுமார் நான்காயிரம் பேரை ஈடுபடுத்தவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply