பிரணாப் முகர்ஜியின் விஜயம் தமிழர் பிரச்சினையில் மாறுதலை ஏற்படுத்தும்
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை விஜயத்துடன் இலங்கைத் தமிழ் மக்கள். பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்படுமென தாம் நம்புவதாக இந்தியாவின் மத்திய பஞ்சாயத்துத் துறை அமைச்சர் மணி சங்கர் ஐயர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவமொன்றில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் மணி சங்கர் ஐயர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், யுத்த நிறுத்தமொன்றுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் விருப்பம் தெரிவித்திருந்தமை பெரிய விடயம். இந்த நிலையில் இலங்கை அரசாங்கமும் யுத்த நிறுத்தம் செய்து இப்போதைய பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காண வேண்டும்.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தனிநாடல்ல. ஒன்றுபட்ட இலங்கைகுள்ளே அது அமைய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply