நாடாளுமன்றத் தேர்தலில் 51-55 வீத வாக்குப்பதிவு
இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலில் 51 முதல் 55 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது. அந்நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மிர் சற்றுமுன்னர் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
ஏனைய கண்காணிப்பு நிலையங்களின் தகவலின் படி 55 வீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவுகளே இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன. நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு 22 மாவட்டங்களில் 7620 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். பதிவு செய்யப்பட்ட 336 கட்சிகளும் 301 சுயேட்சை கட்சிகளும் தேர்தல் களத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply