தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் விமான நிலைய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியல்வு அதிகாரிகள் தன்னை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று காலை இந்தியா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்றதாகவும் இதன் போது, குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தன்னை நாட்டில் இருந்து செல்ல அனுமதிக்க முடியாது எனக் கூறியதாகவும் அரியநேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் உள்ள காவற்துறை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் அவர் விமான நிலைய அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன் போது தன்னை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்அதிகாரிகள் கூறியதாக அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் துறையினர் உத்தியோபூர்வமாக தமக்கு இதனை அறிவித்துள்ளனர் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாகவும் அரியநேந்திரன் கூறியுள்ளார்.
தான் சென்னையில் சிகிச்சைக்கான முன்பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் செவ்வாய் கிழமை இந்த சிகிச்சை நடைபெற இருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவு குறித்தோ தமது தீர்மானம் பற்றியோ புலனாய்வுதுறையினர் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply