ஜனாதிபதி கட்சி முன்னிலை
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது, வடக்கே போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என தேர்தல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அங்கு வாக்குப் பதிவு 50 சதத்துக்கும் குறைவாகவே இருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
ஐந்தில் ஒரு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி 60 சதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது. ராஜபக்ஷவின் சொந்தப் பிரதேசமான தெற்கே, அவருக்கு இந்தத் தேர்தலில் பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளதாக செய்தியாளர் கூறுகிறார். கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பிறகு, ராஜபக்ஷவின் செல்வாக்கு அங்கு அதிகரித்தது.
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டவரும், தற்போது காவலில் உள்ளவருமான முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகாவின் ஐக்கிய தேசியக் கட்சி, ஐந்து சதம் வாக்குகளை மட்டும் பெற்று பின்தங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply