ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று நன்றிக்கடனோடு மக்கள் வாக்களிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருப்பதையே பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிப்படு த்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டளஸ் அழகப் பெரும தெரிவித்தார். அதேநேரம் எதிர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டு ஏற்பாடுகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதன் விளைவாகவே வாக்களிப்பு மந்தமாக இடம்பெற்றதாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.
பொதுத் தேர்தல் முடிவுகள் குறி த்து மேற்கண்டவாறு குறிப்பிட்ட அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் கூறுகையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு. பெற்ற வாக்குகளை விடவும் அதிக ப்படியான வாக்குகளை பல தொகு திகளில் இம் முன்னணி பெற்றிருக் கின்றது.
இதனை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐ.ம.சு. முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இதேநேரம் இத்தேர்தலில் எதிரணியினர் பாரிய தோல்வியைத் தழுவுவதற்கு அவர்கள் தங்களது பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டதே காரணமாகும். இதற்காக அவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர்.
முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் மக்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக இத்தேர்தலில் வாக்களித்தனர். அதற்குரிய வாய்ப்பு எமது ஜனாதிபதியினாலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டது என்றும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply