விமான விபத்தில் பலியான போலந்து அதிபர் உடல் மீட்பு
விமான விபத்தில் பலியான போலந்து அதிபர் உடல் கிடைத்தது. போலந்து நாட்டு அதிபர் லெக்கிசன்ஸ்கி சென்ற விமானம் ரஷியாவில் நேற்று விழுந்து நொறுங்கியது. இதில் அதிபர் லெக்சி கன்ஸ்கி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 97 பேர் பலியானார்கள். விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேருமே பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விழுந்து கிடந்த இடத்தில் அனைவருடைய உடல்களும் சிதறி கிடந்தன. அடையாளம் காண முடியாத அளவிற்கு பல உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன.
ரஷிய மீட்பு குழுவினர் உடல்களை சேகரித்து அவற்றை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அதில் அதிபர் லெக்க சின்ஸ்கி உடல் இருந்ததை கண்டு பிடித்தனர். அவரது உடல் அங்கிருந்து தனி இடத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அவருடைய மனைவி உடல் இன்னும் கிடைக்கவில்லை. லெக்கிசன்ஸ்கி உடலை உடனடியாக போலந்து கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அங்கு கிடைத்த உடல்கள் அனைத்தையும் ரஷிய தலைநகரம் மாஸ்கோவுக்கு கொண்டு வந்தனர். அவற்றை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி கிடக்கும் உடல்களை டி.என்.ஏ. மரபணு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
விபத்துக்கு விமான பைலட்டின் அலட்சியமே காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. விமானம் தரை இறக்க வேண்டிய சுமோலென்ஸ்க் விமான நிலையத்தில் அதிக அளவில் பனி மூட்டம் இருந்தது எனவே விமான பைலட்டிடம் வேறு விமான நிலையத்துக்கு சென்று தரை இறங்கும்படி கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கொடுத்தனர். இதை அவர் ஏற்க மறுத்து விட்டார். வலுக்கட்டாயமாக அங்கேயே தரை இறக்குவதாக கூறினார்.
எனவே கட்டுப்பாட்டு அறையில் இருந்து பைலட்டிடம் குறுக்காக பறந்து வந்தபடி தரை இறக்கும்படி கூறினார்கள். ஆனால் அவர் அதை ஏற்காமல் செங்குத்தாக பறந்து வந்தபடி தரை இறங்கினார். எனவே தான் விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாக ரஷிய விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அதிபர் மறைவு போலந்து நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு நாடு முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. அதிபர் மாளிகைக்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply