உயர் பாதுகாப்பு வலயங்கள் கிரமமான முறையில் அகற்றப்படும்: டக்ளஸ்
உயர் பாதுகாப்பு வலயங்கள் கிரமமான முறையில் அகற்றப்படும் என முன்னாள் சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.டி.பி கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக அகற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாண மக்கள் எவ்விதமான அடக்குமுறைகளையோ அல்லது அச்சுறுத்தல்களையோ எதிர்நோக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மக்கள் அனுபவிக்கும் அதே சுதந்திரத்தை வடக்கு மக்களும் அனுபவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் டக்ளஸ் தேவனாந்த வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply