வன்முறைகளை தடுக்க நாடளாவிய ஏற்பாடு

தேர்தலுக்குப் பின்னரான வன் முறைகளை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதி முறைகள் தொடர்ந்தும் ஏழு தினங்களுக்கு அமுலில் உள்ளதாகத் தெரிவித்த அவர் எவரேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

குழப்பம் ஏற்படுத்த முயற்சிப் பவர்களுக்கு எதிராக எந்தவித பாகுபாடுகளும் இன்றி கடுமை யான சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் மேலும் தெரி வித்தார்.
தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தேர்தல் முடிவுற்று ஏழு நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற் றும் பேரணிகள் நடத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு பின்னர் இடம் பெற்ற சம்பவங்களில் அநேகமான வைகள் ஒரே கட்சியை சேர்ந்தவர் களுக்கு இடையிலான மோதல்க ளாகும் என்றும் அவர் குறிப்பிட் டார். தேர்தலுக்கு பின்னர் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இதுவரை சுமார் ஐந்து முறைப் பாடுகளே கிடைத்துள்ளன என்று தெரிவித்த அவர் இந்த முறைப் பாடுகள் தொடர்பில் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் மாவட்ட ஐ. தே. க. சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற பாலித ரங்க பண்டார அதே கட்சியில் போட் டியிட்டு தோல்வியுற்றுள்ள சாந்த அபேசேகர உட்பட அவரது ஆதர வாளர்களால் தாக்கப்பட்டு வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்பு டைய ஐ. தே. க. வேட்பாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு ள்ளர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடளா விய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப் படையில் மேற்கொள்ளப்பட்டுள் ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நகர்ப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக் கள் அதிகமாக கூடியுள்ள பிரதே சங்களில் பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுவருட காலத்தில் அசம்பாவி தங்கள் மற்றும் கொள்ளைச் சம் பவங்கள் இடம்பெறுவதை தவிர் க்கும் வகையில் விசேட பொலிஸ் நடமாடும் சேவைகள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதுடன் சிவிலிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடு த்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜய கொடி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply