நாளை மலர்கிறது விகிர்தி புத்தாண்டு
புதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நாளை 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும், ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியும் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில் புதுவருடம் பிறக்கிறது எனக் கூறப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 2.57 முதல் புதன்கிழமை 10.57 வரையுள்ள காலம் புண்ணிய காலமாகத் திருக்கணித பஞ்சாங்கமும், செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23 முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply