கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்தில் இராணுவம்
கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திலிருக்கும் இராணுவத்தினர், அண்மையில் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட பகுதியான புளியங்குளம் நகரில் புதிய சோதனைச் சாவடியொன்றை அமைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புளியங்குளத்தை இராணுவத்தினர் மீட்டதைத் தொடர்ந்து அங்கு புதிய வீதித்தடையை ஏற்படுத்தி, சோதனைச்சாவடியொன்றை அமைக்கவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயகார கூறினார்.
வவுனியா ஊடாக தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்களை இந்தப் புதிய சோதனைச் சாவடியில் சோதிப்பதற்கும், கட்டுப்பாடற்ற பகுதிகளை ஓமந்தைச் சோதனைச் சாவடியில் சோதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டார்.
புதிதாக அமைக்கப்படவிருக்கும் சோதனைச் சாவடிப் பகுதியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.
புளியங்குளம் பகுதியில் புதிதாக சோதனைச்சாவடி அமைக்கப்படவிருக்கும் இடத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேடியாகச் சென்று பார்வையிட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும், கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திலேயே இராணுவத்தினர் தற்பொழுது நிலைகொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் நடைபெறும் மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் கூடுதலான இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply