மலேசியாவிலிருந்து சென்னை வந்த பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டார்
சென்னை விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்றிரவு 10.45 மணி அளவில் வந்து தரையிறங்கியது. அந்த விமானத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி விசாரணை நடத்தினார்கள்.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் வந்திருப்பது பிரபாகரனின் தாயார்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கு பக்கவாத நோய் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவுமே சென்னை வந்ததாக அதிகாரிகளிடம் பார்வதிஅம்மாள் கூறினார். ஆனால், இந்தியாவுக்குள் நுழைவதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, நீங்கள் திரும்பிச் சென்றே தீரவேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, அந்த விமானத்திலேயே மலேசியாவுக்கு பார்வதிஅம்மாளும், அவருடன் வந்த பெண்ணும் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply