புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக மாகாணங்களிற்கான சுயநிர்வாகம் ‐ பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் இயல்பு வாழ்க்கைக்கு எதுவான விடயங்கள் உள்ளடக்கப்படுமேயன்றி, அந்த மாகாணங்களிற்கான சுயநிர்வாகம் மற்றும் பொலிஸ் அதிகாரம் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது என அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது. எட்டு நாடுகளில் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தி, தமிழ் மக்கள் சுய நிர்வாகத்திற்கு விரும்பம் கொண்டுள்ளதாக அந்த நாடுகளின் தலைவர்களிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பாகவே அரசாங்கம் இந்த நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அமோக வெற்றிப் பெற்றுள்ள அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மேற்குலக நாடுகளின் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அதிகாரம் பரவலாக்கப்படுமாயின், நேரடியான வெளிநாட்டு உதவிகள் பெறுதல், காவற்துறை அதிகாரம், இராணுவம் முகாம்களை அகற்றுதல், கனிய வளம் உள்ளிட்ட ஏனைய வளங்களின் உரிமைகளை வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ் கட்சிகள் வெளிநாட்டு தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தன்னாட்சி நிர்வாகம் கோரி தமிழ் மக்களை தூண்டி விடும் தமிழ் கட்சிகளை தடைசெய்ய வகையில் புதிய சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் இவ்வாறான சட்டங்கள் நடைமுறையில் இருக்கவில்லை. எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது உரிமைகளுக்காக போராட்டம் நடத்தும் மக்களை ஒடுக்கும் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply