உரிமம் பெற்ற வங்கிகளை வடக்கு, கிழக்கில் திறக்க மத்திய வங்கி அனுமதி
உரிமம் பெற்ற வங்கிகள் பல வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார செயற் பாடுகளிற்கு துணைபுரிவதற்கு மிகுந்த ஈடுபாட்டினை காட்டி வருவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கொமர்சல் பாங்க் ஒப்சிலோன் பிஎல்சி, அட்டன் நஷனல் பாங்க் பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி,மக்கள் வங்கி, சம்பத் பாங்க் பிஎல்சி மற்றும் செலான் பாங்க் பிஎல்சி என்பன அக்கரைப்பற்று, அச்சுவேலி, களுவாஞ்சிகுடி, கிளிநொச்சி, மல்லாவி, மானிப்பாய், மாங்குளம், மன்னார், பரந்தன், துணுக்காய் மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் அடுத்து வரும் ஒருசில மாதங்களில் கிளைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதற்குத் தேவையான அனுமதி மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் உரிமம் பெற்ற வங்கிகளும் 2010ஆம் ஆண்டில் ரூ. 56 பில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் 2011ம் ஆண்டில் ரூ. 70 பில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவருவதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply