கிளிநொச்சி கிழக்கில் அடுத்தவாரம் மீள்குடியமர்வு
கிளிநொச்சி கிழக்குக்கான மீள்குடியேற்றப் பணிகளை அடுத்துவரும் ஒரு வார காலத்தில் ஆரம்பி ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். மோதல்களின்போது இடம்பெயர்ந்தவர்கள் இதுவரை கிளிநொச்சி மேற்கிலேயே குடியமர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதற்தடவையாக எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியினுள் கிளிநொச்சி கிழக்கிலும் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்பட விருப்பதாக அவர் கூறினார். கிளிநொச்சி கிழக்கில் ஒரு மாத காலப்பகுதிக்குள் ஆகக்குறைந்தது 2,900 குடும்பங்களை மீளக் குடியேற்றும் வகையில் அதற்கான ஒழுங்குகளை அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருகிறது.
தற்போது அப்பகுதியில் திருவையாறு, கனகாம்பிகை குளம், ரத்தினபுரம் மற்றும் மருத நகர் ஆகிய இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் கிளிநொச்சி கிழக்கைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஒரு வார காலப்பகுயினுள் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவரெனக் கூறிய அரச அதிபர் ஏனைய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply