அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றி விவாதிக்க தயார்
அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெற்றோலியத்துறை அமைச்சும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ஹெஜிங் ஒப்பந்தம் மூலம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறி அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்தது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இந்தப் பிரேணைவைத்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர உரையாற்றிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றி விவாதிக்கத் தயார் எனக் கூறினார்.
மதிய உணவு இடைவேளையின் பின்னர் சபை கூடும்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றி விவாதிக்க அரசாங்கம் தயார் எனவும், அதற்கு முன்னர் கட்சித் தலைவர்கள் சந்திப்பைக் கூட்டுமாறும் பிரதி சபாநாயகரிடம், அமைச்சர் கோரிக்கை விடுத்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் அறியத்தருகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply