புதிய நாடாளுமன்றத்துக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியீடு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 17 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜெயரத்ன, டளஸ் அழகபெரும, ஜீ.எல்.பீரிஸ், டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண,கீதாஞ்சன குணவர்த்தன, வண.எல்லாவள மேதானந்ததேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜாகொட, விநாயகமூர்த்தி முரளீதரன்,ஜே.ஆர்.பி.சூரியபெரும, ஜனக பண்டார, பேராசிரியர்.ராஜிவ் விஜயசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கமல் ரணதுங்க ஆகியோர் ஐ.ம.சு.மு. தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர். அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.ஐ.தே.க. சார்பில் 9 பேர் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஹர்ஷ டி சில்வா, ஏர்ன் விக்கிரமரத்ன, டி.எம்.சுவாமிநாதன், ஆர்.யோகராஜன், அனோமா கமகே, ஹசன் அலி, சலீம் மொஹமட் ஆகியோர் ஐ.தே.க தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர். அத்துடன் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அநுர குமார திஸாநாயக்க , டிரான் அலஸ் ஆகியோரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக எம்.சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply