மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத்

இந்நாட்டில் மாறுபட்ட கருத்துடையவர்கள், மாறுபட்ட சிந்தனையுடையவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் ஜன நாயகத்துக்கு விரோதமானவர்கள் எனக்கூறி கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றுகாலை 8.30 மணிக்கு ஆரம்பமானது. சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவுகளைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு வாழ்த்துரை நிகழ்த்தினர்.

அதன்போது உரையாற்றிய ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஜனநாயக நாட்டில் தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply