கூட்டுப் பொறுப்பு, புரிந்துணர்வுடன் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை
மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ள மக்களுக்கு தார்மீகப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேநேரம் அமைச்சர்கள் அமைச்சரவையிலும், அமைச்சுக்களிலும் கூட்டுப் பொறுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டு மெனவும் அவர் கேட்டுக் கொண்டார். புதிய அமைச்சர்களுக்கு நேற்று சத்தியப்பிரமாணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி சகல அமைச்சுக்களும் முக்கியமானவையே என்பதை வலியுறுத்தியதுடன் அர்ப்பணிப்புடன் உழைத்து மக்களின் கெளரவத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய அமைச்சரவை நேற்றுப் பதவியேற்றுக்கொண்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு
அங்கீகாரமளித்துள்ள மக்கள் அரசின் மீது முழுமையான நம்பிக்கையையும் வைத்துள்ளனர். அந்த வகையில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடனேயே வாக்க ளித்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பினை அமைச்சர்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நாட்டு மக்கள் எதிர்க் கட்சிக்குப் பெருமளவு வாக்குகளை வழங்கி வந்துள்ளனர். இத்தகைய பெரும்பான்மை வாக்குகளை அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
ஒன்றிணைந்த அரசில் கூட்டுப் பொறுப்பு டன் இளைய பாராளுமன்ற உறுப்பினர் களுக்கு முன்மாதிரியாகச் செயற்படுவதும் முக்கியமாகும். பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒருமித்த குரலில் செயற்பட்டு மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டு மெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.அமைச்சரவை நியமனங்களின் போது பெரும் அசெளகரியங்களைச் சந்திருக்க நேர்ந்தது. அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கமாக இருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply