வடக்கு ரயில் பாதை அமைப்புப் பணிகளில் இந்தியப் பொறியியலாளர்கள்

வவுனியா மற்றும் மதவாச்சி பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள இந்திய பொறியியலாளர்கள் குழு ஒன்று வடபகுதிக்கான ரயில் பாதையை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதையின் நிர்மாணப் பணிகளை இந்திய நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை அமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரை எஞ்சியுள்ள மூன்று மைல் தூரம் கொண்ட ரயில் பாதையை அமைக்க சுமார் மூன்று மாத காலம் எடுக்கும் என ரயில்வே திணக்களம் எதிர்பார்க்கின்றது. வவுனியாவுக்கு வருகை தந்துள்ள இந்தியப் பொறியியலாளர்கள், தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையை அமைக்கும் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply