அரியநேந்திரன் இந்தியா செல்லவிடாமல் தடுத்தமை பற்றி கூட்டமைப்பு சிறப்புரிமைப் பிரச்சினை
இந்தியா செல்லவிடாமல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விமான நிலையத்தில் தன்னைத் தடுத்தமையானது சிறப்புரிமையை மீறும் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முறையிட்டார்.
இந்தியாவுக்குச் செல்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்த அதிகாரி எனது கடவுச்சீட்டில் பிழையிருப்பதாகக் கூறி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் அழைத்துச் சென்றார்” என அவர் கூறினார்.
விசாரணை நடத்திய அந்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி நாட்டைவிட்டு வெளியேறத் தனக்கு அனுமதியில்லையெனக் கூறியதாகவும், இது தனது சிறப்புரிமையை மீறும் செயல் எனவும் அரியநேந்திரன் சபாநாயகரிடம் முறையிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அதிகாரம் இல்லையென உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள போதும், சட்டத்தை மீறும் வகையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு உத்தரவிடுவதாக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply