பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ யாழ் விஜயம்
முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் சகிதம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குடாநாட்டின் கள நிலைவரம் குறித்து விரிவாக ஆராய்ந்தார். நேற்றுக்காலை பலாலி வந்தடைந்த கோத்தபாய ராஜபக்ஷவை, யாழ். படைக ளின் தளபதி மேஜர். ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பலாலி தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில், குடாநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கோத்தபாயவுக்குத் தளபதி விளக்கிக் கூறினார். அதன்பின்னர் காங்கேசன்துறைக் கடற்படை முகாமுக்குச் சென்ற கோத்தபாய, வடபிராந்திய கடற்படைத் தளபதியுடன் கலந்துரையாடி நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் யாழ். நகருக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறைச் செயலாளர் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்.நாக விகாரை, யாழ்.கோட்டை, நகரப் பகுதி ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார். யாழ். நகர சிவில் அலுவலகத்தில் படை அதிகாரிகள் மற்றும் படையினரு டன் கலந்துரையாடி அவர்களின் சேம நலன்களைக் கேட்டறிந்தார்.
நேற்று மாலை நயினாதீவு விகாரைக்குச் சென்ற கோத்தபாய அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். இதேவேளை ஆனையிறவு முகாமில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத் தூபியைக் கோத்தபாய இன்று திறந்து வைக்கவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply