திம்புவில் மஹிந்த – மன்மோகன் சந்தித்துப் பேச்சு
பூட்டான், திம்பு நகரில் நடைபெற்ற 16 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் மன் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. திம்பு நகரிலுள்ள கிரேன்ட் எஸம்பிலி மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கையில் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற மீள் குடியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக அரசியல் தீர்வின் முன்னேற்றம் மற்றும் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
அதற்கும் அப்பால் சார்க் மாநாட்டின் வெள்ளிவிழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட பிரகடனம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர். பூட்டான் பிரகடனத்தை தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளும், கண்காணிப்பு நாடுகளும் பாராட்டியுள்ளன.
இந்த சந்திப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சார்க் நாடுகள் கடந்த 25 வருடங்களுக்குள் எட்டியுள்ள அபிவிருத்தி மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இருநாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தினர். 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது வெளியிடப்பட்ட கொழும்பு பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் அவற்றை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
சார்க் வலய நாடுகளுக்கும் மிக முக்கியமான செயற்திட்டங்களை அமுல்படுத்தல் அதற்கான தூரநோக்கு அவை தொடர்பில் எதிர்கால சந்ததியினர் மேற்கொள்ளவேண்டிய விவாதங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
சார்க் நாடுகளின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு எவ்வாறான அழுத்தங்களை கொடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர். சார்க் பல்கலைக்கழகத்தை அமைத்தல், சார்க் வலயநாடுகளுக்கென நாணயத்தை அறிமுகப்படுத்தல் மட்டுமன்றி சார்க் பல்கலைக்கழக நிர்மாணம் தொடர்பில் இவ்வாண்டு இறுத்திக்குள் திட்டவரைபை தயாரிக்கவேண்டும். அது மட்டுமன்றி வலயநாடுகளுக்கு இடையில் பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையை ஒழிப்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சார்க் நாடுகளுக்கிடையில் விவசாயத்தை மேம்படுத்தல் அதற்கான தொழில்நுட்பங்களை வலய நாடுகளுக்கிடையில் பகிர்ந்து கொள்ளல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply