எமது அழைப்பையேற்றே முஹர்ஜி இலங்கை வருகிறார்:போகல்லாகம

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியின் இலங்கை விஜயம் தொடர்பில் இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
முஹர்ஜி இலங்கை வரும் திகதி, நேரம் குறித்து எந்தவிதமான அட்டவணைகளும் தயாரிக்கப்படவில்லையெனவும், இதனால், அவர் இலங்கை செல்வது உறுதியாகவில்லையெனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் மிக விரைவில் நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கூறியுள்ளபோதும், அவரின் விஜயத்துக்கான திகதிகள் உத்தியோகபூர்வமாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையெனத் தெரியவருகிறது.

எமது அழைப்பையேற்றே முஹர்ஜி இலங்கை வருகிறார்

இதேவேளை, கடந்த காலத்தில் தான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, கொழும்பு வரவிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்தார்.

ஒரு மாதத்துக்கு முன்னர் இலங்கையே, இந்திய வெளிவிவகார அமைச்சரை அழைத்தது” என ஊடகவியலாளர் மாநாட்டில் போகல்லாகம கூறினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தைத் தாம் எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்ட ரோஹித்த பொகல்லாகம, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராகவில்லாதபோதும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தத் தயாராகவிருப்பதாகத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply