அடம்பன் வைத்தியசாலையில் இராணுவத்தினர் மாபெரும் சிரமதானம்
மன்னார் அடம்பன் வைத்தியசாலையினை மீள்திறக்கும் பொருட்டு அதனை மாபெரும் சிரமதான வேலைத்திட்டம் ஒன்றின் மூலம் துப்பரவு செய்திருப்பதாக படைத்தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர். மாந்தை மேற்கின் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலை கடந்த மாதம் 28ம் திகதி வடமாகான ஆளுனரினால் திறந்து வைக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படைத்தரப்பினர் மேற்படி சிரமதானத்தினை மேற்கொண்டிருக்கின்றனர்.
ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த தினத்தில் அடம்பன் வைத்தியசாலை திறக்கப்படவில்லை. அடம்பன் வைத்திய சாலை கடந்த யுத்த சூழ்நிலையின் காரணமாக பெரும் சேதத்திற்குள்ளான நிலையில் தற்போது அது இராணுவத்தினரின் உதவியுடன் புணரமைப்புச் செய்யப்பட்டு சிரமதான அடிப்படையில் துப்பரவு பணிகள் இடம்பெற்றிருக்கின்றது. மன்னார் மாந்தை மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 215ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் விக்கும் லியனகே மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான சிவில் நிர்வாக அதிகாரி கேணல் நலிந்த மகாவித்தாரன ஆகியோரின் வழிநடத்தலுக்கமைவாக மேற்படி சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்குப் பிரதேசத்தில் பரவலாக மக்கள் மீள் குடியேறியிருக்கும் நிலையில் அடம்பன் வைத்தியசாலையின் தேவை தற்போது உணரப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் மக்களுக்கான வைத்திய வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பல இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடம்பன் வைத்தியசாலையும், அதன் வளாகமும் இராணுவத்தினரின் முயற்சியில் துப்பரவு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த மாதம் 28ஆம் திகதி அடம்பன் வைத்தியசாலை பிரதேச மக்களின் வைத்திய தேவையின் பொருட்டு சிகிச்சைக்காக வடமாகாண ஆளுனர் மேஜர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ அவர்களினால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதும் அது பிற்போடப்பட்டிருக்கின்றது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply