கடற்படைத் தலையகத்தில் சரத் பொன்சேகா இன்று உண்ணாவிரதம்!

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற அனுமதி அளிக்காததைக் கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா உண்ணாவிரதம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயக தேசிய முன்னணியின் ஊடகப்பிரிவு இதனை உறுதி செய்துள்ளது. சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யவென அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று நண்பகல் மீண்டும் கூடவுள்ளது.

கடற்படைத் தலைமையகத்தில் நேற்று பிற்பகலில் இடம்பெற்ற இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு ஜெனரல் சரத் பொன்சேகா சமூகமளித்திருக்கவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய சட்டத்தரணிகள் இரண்டாவது நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் முழுமையாகப் பங்குகொள்ள தனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். இதற்கமைய சரத் பொன்சேகா, அமர்வுகள் முடியும் வரை நாடாளுமன்றத்தில் இருக்கலாமென சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply