அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை முன்னேற்றுவதே எமது இலக்கு: அமைச்சர் பசில் ராஜபக்ஷ

அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை முன்னேற்றுவதே எமது இலக்காகும். இந்த இலக்கை அடைவதற்கு மத்திய வங்கி முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று மத்திய வங்கிக்கு விஜயம் செய்தார். மத்திய வங்கி அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது : கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரிய ஆணையை வழங்கினர். அவர்கள் வழங்கிய பெரும் பான்மை அதிகாரத்தைப் போன்றே அவர்களின் எதிர்பார்ப்பும் மிகப் பெரியதாகும். மக்களின் பாரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நாம் கூடுதல் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.

கடந்த 60 வருடங்களாக இலங்கை அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். வறுமை ஒழிப்பு, கிராமிய அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதி போன்ற பல இலக்குகளை வெற்றிகொள்வதே எமது அமைச்சுக்குள்ள முக்கிய பொறுப்புகளாகும். எமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சரியான வழிகாட்டல்களை மத்திய வங்கி வழங்க வேண்டுமென்றார்.

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் :

2050 டொலர்களாக உள்ள இலங்கையின் தனிநபர் வருமானத்தை 4 ஆயிரம் டொலர்களாக உயர்த்துவதே எதிர்கால இலக்காகும். இதனை அடைய மத்திய வங்கி தனது முழுப் பங்களிப்பையும் அளிக்கும். நாட்டை, அபிவிருத்தி செய்வதற்கு நீண்ட காலத் திட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply